தஞ்சம் கோரி பிரித்தானியா சென்ற இலங்கை தமிழர் பிரித்தானிய மேயரானார்
Ipswich Borough Council மேயராக இலங்கையில் இருந்து வந்து ஐக்கிய இராச்சியத்தில் தஞ்சம் பெற்ற இளங்கோ இளவழகன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்ஸ்விச் நகர சபையின் வருடாந்த கூட்டத்தின் போது மேயராக இளங்கோ இளவழகன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
இளங்கோ இளவழகன் தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார், மேலும் இளங்கோ இளவழகனின் பெயரை மேயர் பதவிக்கு இப்ஸ்விச் நகர சபையின் தலைவர் நீல் மெக்டொனால்ட் முன்மொழிந்தார்.
பெயரை முன்மொழிந்து பேசிய அவர், புதிய மேயர் தனது பதவிக் காலத்தில் பிரித்தானிய பொதுத் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் அதிர்ஷ்டத்தை பெறுவார் என்றார்.
இப்பதவியை ஏற்றுக்கொண்ட இளங்கோ இளவழகன், இன்று தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், Ipswich Borough Council மேயராக இருப்பதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.
இலங்கையை விட்டு இங்கிலாந்துக்கு வருவதற்கு முன், இளங்கோ இளவழகன் இந்தியா, உகாண்டா, ருவாண்டா ஆகிய நாடுகளில் பணியாற்றியுள்ளார்.
1990 களின் இனப்படுகொலைக்குப் பிறகு ருவாண்டாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முக்கிய திட்டங்களில் அவர் பணியாற்றினார்.
2006 ஆம் ஆண்டில் அவர் தனது மனைவி மஞ்சுளாவுடன் இங்கிலாந்தில் குடியேறினார்.