5 கோடி மதிப்புள்ள செல்போன்களுடன் , இருவர் விமான நிலையத்தில் கைது.

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு சுங்க வரி செலுத்தாமல் விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்ட சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான நவீன கையடக்க தொலைபேசிகள் மற்றும் பென் டிரைவ்களை கொண்டு வந்த வர்த்தகர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இருவரில் ஒருவர் கொழும்பு-12 பகுதியில் வசிப்பவர் என்பதுடன் அவருக்கு வயது 59. மற்றைய வர்த்தகர் 24 வயதான கொழும்பு-14 ஐ வசிப்பிடமாகக் கொண்டவர்.

இவர்கள் இருவரும் இன்று அதிகாலை 04.55 மணியளவில் டுபாயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக கையடக்க தொலைபேசிகள் மற்றும் பென் டிரைவ்களை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.