“செயற்கை நுண்ணறிவுடன் விவசாயத்தில் புதிய மாற்றத்திற்கு தயார்” – ரணில் விக்ரமசிங்க.
செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் நாட்டின் விவசாயத்தை மாற்றியமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்யத் தயாராக இருக்கும் தனியார் துறை தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேகாலை நெலும்தெனிய பிரதேசத்தில் கலாநிதி ஹர்ஷ சுபசிங்கவினால் நிர்மாணிக்கப்பட்ட பசுமைக்குடத்தை அவதானிக்கும் நிகழ்வில் நேற்று (17) கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
இந்த வருடம் இந்த விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்காக 100 பிரதேச செயலாளர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.