முகம் பளிச்சுனு இருக்க உளுந்தை இப்படி பயன்படுத்தினாலே போதும்!
தற்போது மாறிவரும் உணவு பழக்கத்தால் உடல் ஆரோக்கிய குறைபாடும் கூடவே சரும ஆரோக்கியமும் கெடுகிறது.
இதனை போக்குவதற்காக பலரும் கெமிக்கல் நிறைந்த கிறீம்கள் வாங்கிப்போடுவதுண்டு. இது முற்றிலும் தவறு. ஏனெனில் இது சில சமயங்களில் பக்கவிளைவுகளை கூட ஏற்படுத்திவிடும்.
இதற்கு மாறாக சில வீட்டில் இருக்கும் எளிய பொருட்கள் கொண்டே முகத்தை பளிச் என வைத்து கொள்ள முடியும்.
அந்தவகையில் நமது முற்கால பெண்கள் தங்களது முகத்தை அழகுப்படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு பொருள் உளுந்து. இது முகத்தினை பளிச் என வைத்து கொள்ள பெரிதும் உதவி புரிகின்றது.
அந்தவகையில் உளுந்தை எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.
எப்படி பயன்படுத்தலாம்?
- முதல் நாள் இரவே கால் கப் உளுந்தை சிறிது நீர் சேர்த்து ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த நீர் கொண்டு உளுந்தை அரைத்து வைக்கவும். உளுந்து மட்டும் நன்றாக மசித்து வைத்தால் போதும்.
- உளுந்து அரைத்ததும் பயன்படுத்திவிட வேண்டும். இல்லையெனில் அவை உப்பி விடும். அதோடு அதிகம் நீர் சேர்த்து அரைக்க வேண்டாம்.
- பிறகு தேவைப்படும் போது ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் நீரில் சேர்த்து குழைத்து அரைமணி நேரம் ஊற வைத்தாலும் போதுமானது.
- உளுந்து அரைத்த மாவுடன் சற்று பேஸ்ட் போல் குழைத்து அதில் பன்னீர் சேர்த்து கலக்கவும். தேவையெனில் இரண்டு டீஸ்பூன் கடுகு எண்ணெய் கலக்கவும். அனைத்தும் சேரும் வரை கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்தபடி விடவேண்டும்.
- கழுத்தின் பின்புறம் கருப்பு இருந்தாலும் கழுத்து மடிப்பு இருந்தாலும் அந்த இடத்திலும் இதை தடவி மசாஜ் செய்வதன் மூலம் கருப்பு நீங்கும்.
- முகத்தில் தடவி அவை நன்றாக காயும் வரை வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும்.
- வாரம் மூன்று நாட்கள் வரை இதை செய்து வரலாம். எளிமையான அதே நேரம் சருமத்துக்கு சத்தும் தரும் பராமரிப்பும் தரும்.
சருமத்துக்கு கிடைக்கும் பலன்
- முதலில் சருமம் இழந் நிற மாற்றத்தை ஈடு செய்யும். முகத்தில் இருக்கும் கருமை மறையக்கூடும்.
- முகத்தில் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்கை வெளியேற்றுவதால் சருமம் பளிச்சென்று இருக்கும்.
- முகப்பருக்கள் வராது. முகப்பருக்கள் வந்தாலும் உளுந்து பராமரிப்பை தொடர்ந்து செய்யும் போது பருக்கள் வலிவிழந்து மறைந்துவிடும்.
- பருக்களால் உண்டாகிய வடுக்கள், தழும்புகள் போன்றவற்றையும் மறைக்கும். முகத்தில் உண்டாகும் சுருக்கங்கள் மறையும். முகத்தில் வறட்சி இல்லாமல் தடுக்கும்.
- அதிக எண்ணெய்ப்பசை பிரச்சனை இருப்பவர்களுக்கு குறையும். சருமம் மென்மையாக மாறும். குறிப்பாக கழுத்துப்பக்கம் இருக்கும் கருமை பெருமளவு மறையும்.
- இதைபயன்படுத்துவதால் சருமத்தில் பிரச்சனை உண்டாக்காது. தோல் நீக்கப்பட்ட உளுந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.