100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? தமிழக அரசு விளக்கம்!
100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய முயல்வதாக சமூக வலைதலங்களில் செய்திகள் பரவின.
இதனையடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.
அதில் தமிழ்நாட்டில் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்று தெரிவித்துள்ளது. விதிமுறைகளுக்கு மாறான மின் இணைப்புகளை கண்டறிந்து, ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாகவும் மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.
வீட்டு மின் இணைப்பை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதை கண்டறிந்து உரிய மின் கட்டணத்திற்கு மாற்றவே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மின்சார வாரியம் குறிப்பிட்டுள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பாக பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்பட மாட்டாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலதிக செய்திகள்
தம்மிகவின் மற்றுமொரு சிறந்த பணி – குருநாகலில் 3000 மில்லியன் பெறுமதியான கல்விச் சான்றிதழ்!
அநுரவுக்கு 50% ஆதரவு இப்போதே உள்ளது.. அவர் ஜனாதிபதி ஆவது 500% உறுதி.
உலக அளவில் மின்சார வாகன விற்பனை குறைந்துள்ளது.
5 கோடி மதிப்புள்ள செல்போன்களுடன் , இருவர் விமான நிலையத்தில் கைது.
“செயற்கை நுண்ணறிவுடன் விவசாயத்தில் புதிய மாற்றத்திற்கு தயார்” – ரணில் விக்ரமசிங்க.
ரத்துபஸ் வழக்கில் முன்னாள் மேஜர் உட்பட 4 பேர் விடுதலை.
பற்றி எரிந்த பேருந்து – பயங்கர விபத்தில் 8 பக்தர்கள் உடல் கருகி உயிரிழப்பு!