முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் மலர் தூபி, மண்டியிட்டு அஞ்சலி!

இலங்கை வந்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலா மார்ட், இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், இறுதிப் போரில் உயிரிழந்தவர்களை நினைவேந்தி மலர் தூபி, மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர் ஊடகங்களுக்கும் அவர் கருத்துத் தெரிவித்தார். அத்துடன் இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் சொந்தங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடனும் அவர் கலந்துரையாடினார்.