உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் சிறப்பு நிகழ்ச்சிகள்
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களின் ஏற்பாட்டில் நடை பவனியும் அதனைத் தொடர்ந்து மாபெரும் சிறப்பு நிகழ்ச்சிகளும் கல்லடி கடற்கரையில்நேற்று(27) நடைபெற்றது
இந்த நடைபவனியானது கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பித்து கல்லடி கடற்கரை வரை சென்றது அதனைத் தொடர்ந்து கடற்கரையில் அமைக்கப்பட்ட விசேட மேடையில் பல்வேறுபட்ட சிறப்பு கலை நிகழ்வுகள் நடைபெற்றது
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக மட்டக்களப்பின் சுற்றுலாத்தலங்கள் பொறிக்கப்பட்ட சிறிய சுவரொட்டிகள் அதிதிகளிடம் கையளிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பின் இணையம் ஊடாக வீட்டிற்கு தேவையான பொருட்களை வீட்டில் இருந்தே பெற்றுக் கொள்ளும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட அங்காடி இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மஜா கலந்து கொண்டார் மேலும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவன், இளைஞர் பாராளுமன்ற சுற்றுலாத்துறை மற்றும் விமானப் போக்குவரத்து பிரதியமைச்சர் சஜித், உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் செ.ஜெயபாலன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹாலிதீன் அமீர், கிழக்கு மாகாண சுற்றுலா துறை தலைவர் ஹரி பிரதாப், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் ஹரிதரன் கிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.