தவெக மாநாட்டில் பங்கேற்பேன் – சீமான் கொடுத்த அதிரடி அப்டேட்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பங்கேற்க அழைப்பு வந்தால், கலந்துகொள்வேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ர். 2026 மக்களவைத் தேர்தலில், விஜய்யுடன் இணைந்து பயணிப்பீர்களா என்ற கேள்விக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.
சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் மே 18 இனப்படுகொலை நாளையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘‘10 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் நடக்கவில்லை. ஏதற்கு விடுதலை புலிகள் அமைப்பு மீது தடை விதிக்க வேண்டும். தடையை நீக்கி விட்டால் என்ன நடக்கும். நாங்கள் வேகமாக வளர்ந்து விடுவோம் என்று பயம் தான். விடுதலை புலிகள் என்ற பெயருக்கே பயமா? விடுதலை புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தான் தடை தமிழ் தேசியத்தில் இல்லை.
என்னைப்பற்றி ஒரு பெண் 15 ஆண்டுகளாக தவறுதலாக பேசிக்கொண்டிருந்த போது அனைத்து ஊடகங்களும் அமைதியாக இருந்திர்கள். அரசும் அமைதியாக இருந்தது. ஆனால் எனக்கு குடும்பம் உண்டு. இரண்டு மகன்கள் உண்டு அவர்களின் மனநிலையை யோசித்து பார்க்க வேண்டும். அதுபோல் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை பற்றி பேசியது தவறுதான். அதற்கு கைது என்பது ஏற்கத்தக்கது. ஆனால் குண்டர் சட்டம், கஞ்சா வழக்கு என்பதெல்லாம் பழிவாங்கும் செயல். அதிலும் பத்திரிகையாளர் பெலிக்ஸ் கைது முற்றிலும் தவறானது” என தெரிவித்தார்.
மேலும் 850 மீனவர்கள் கொல்லப்பட்ட போது இந்திய மீனவர்கள் பாஜக என கூறாதது ஏன்? கடந்த 10 ஆண்டுகளில் இதை சாதித்துள்ளோம், எனக் கூறி பாஜகவால் மக்களிடம் ஓட்டு கேட்க முடியவில்லை. பாகிஸ்தான், பசு மாடு, பாரத மாதா இது தவிர பா.ஜ.,வுக்கு என்ன தெரியும்? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாட்டில் பங்கேற்பேன் எனக்கூறிய அவர், 2026-ல் கூட்டணியா என்ற கேள்விக்கு, விஜய் சொன்னதை போலவே “வெயிட்டிங்” என்று தெரிவித்தார்.
மேலதிக செய்திகள்
தம்மிகவின் மற்றுமொரு சிறந்த பணி – குருநாகலில் 3000 மில்லியன் பெறுமதியான கல்விச் சான்றிதழ்!
அநுரவுக்கு 50% ஆதரவு இப்போதே உள்ளது.. அவர் ஜனாதிபதி ஆவது 500% உறுதி.
உலக அளவில் மின்சார வாகன விற்பனை குறைந்துள்ளது.
5 கோடி மதிப்புள்ள செல்போன்களுடன் , இருவர் விமான நிலையத்தில் கைது.
“செயற்கை நுண்ணறிவுடன் விவசாயத்தில் புதிய மாற்றத்திற்கு தயார்” – ரணில் விக்ரமசிங்க.
ரத்துபஸ் வழக்கில் முன்னாள் மேஜர் உட்பட 4 பேர் விடுதலை.
பற்றி எரிந்த பேருந்து – பயங்கர விபத்தில் 8 பக்தர்கள் உடல் கருகி உயிரிழப்பு!
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? தமிழக அரசு விளக்கம்!
கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் மண்! – உயிரிழந்த உறவுகளுக்குச் சுடரேற்றி அஞ்சலி.