அனுரவின் சவாலை சஜித் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.. விவாதத்திற்கு நான் தயார்..- ஜனாதிபதி
அநுர திஸாநாயக்கவின் விவாத சவாலை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சவாலின் இறுதி நாளாக மே 20ஆம் திகதியை அனுர திஸாநாயக்க நிர்ணயித்ததாகவும், ஆனால் சஜித் பிரேமதாச அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் அதனை ஏற்று விவாதத்திற்கு முகம் கொடுத்திருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், எவருடனும் விவாதம் செய்யத் தான் தயார் எனத் தெரிவித்த ஜனாதிபதி, தான் அடிக்கடி நாடாளுமன்றத்தில் இருப்பதாகவும், யார் வேண்டுமானாலும் நாடாளுமன்றத்திற்கு வந்து தம்முடன் விவாதம் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள்
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் – சுமந்திரன் எம்.பி. ஒன்றரை மணிநேரம் பேச்சு!
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிறீதரன் எம்பியுடன் கலந்துரையாடிய அக்னெஸ் கலமார்ட்! (Photos)
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுமந்திரன் மண்டியிட்டு அஞ்சலி! (Photos)
கொழும்பில் நடந்த இன மத பேதமற்ற நினைவேந்தல் நிகழ்வு (Photos & Video)