போர்க் குற்றங்களுக்காக இலங்கை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஐநா மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு,பல தசாப்தங்களாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக, இலங்கை பாதுகாப்புப் படைகள் மற்றும் அதனுடன் இணைந்த துணை இராணுவக் குழுக்களின் ஈடுபாட்டை ஒப்புக்கொண்டு பொதுவாக மன்னிப்புக் கோருமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
பல தசாப்தங்களாக பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் தலைவிதி அல்லது இருப்பிடத்தை வெளிக்கொணரவும் மற்றும் வெளிப்படுத்தவும் இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிக்கை மேலும் கூறுகிறது.
வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக் கூறுவதற்கு இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஒருபோதும் மறக்க முடியாது என்பதை இந்த அறிக்கை நினைவூட்டுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் நீண்டகாலமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மீள்வருகைக்காக காத்திருப்பதாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு இருப்பதாகவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள்
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் – சுமந்திரன் எம்.பி. ஒன்றரை மணிநேரம் பேச்சு!
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிறீதரன் எம்பியுடன் கலந்துரையாடிய அக்னெஸ் கலமார்ட்! (Photos)
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுமந்திரன் மண்டியிட்டு அஞ்சலி! (Photos)
கொழும்பில் நடந்த இன மத பேதமற்ற நினைவேந்தல் நிகழ்வு (Photos & Video)
ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு
அனுரவின் சவாலை சஜித் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.. விவாதத்திற்கு நான் தயார்..- ஜனாதிபதி