‘இலங்கையின் போரில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இங்கிலாந்து ஆதரவு கொடுக்கும் ‘ – கேமரூன்

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் இன்னும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்த விடைகளைத் தேடிக்கொண்டிருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு அறிக்கையொன்றை வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2013 ஆம் ஆண்டு இலங்கையின் வடக்குப் பகுதிக்கு விஜயம் செய்தபோது, ​​போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி, உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கு இங்கிலாந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தபோது, ​​போரின் அழிவுகரமான விளைவுகளைப் பற்றி கேள்விப்பட்டதாக டேவிட் கேமரூன் கூறினார்.

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நிலைமாற்று நீதி தொடர்பான சர்வதேச முயற்சிகளுக்கு ஐக்கிய இராச்சியம் தொடர்ந்து தலைமைத்துவத்தை வழங்கும் என டேவிட் கமரூன் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகள்

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் – சுமந்திரன் எம்.பி. ஒன்றரை மணிநேரம் பேச்சு!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிறீதரன் எம்பியுடன் கலந்துரையாடிய அக்னெஸ் கலமார்ட்! (Photos)

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுமந்திரன் மண்டியிட்டு அஞ்சலி! (Photos)

கொழும்பில் நடந்த இன மத பேதமற்ற நினைவேந்தல் நிகழ்வு (Photos & Video)

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

அனுரவின் சவாலை சஜித் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.. விவாதத்திற்கு நான் தயார்..- ஜனாதிபதி

போர்க் குற்றங்களுக்காக இலங்கை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஐநா மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.