3 கொலைகளை செய்துவிட்டு தப்பி சென்றுகொண்டிருந்த நபர் கைது!

இன்று (19) அதிகாலை 2.00 மணியளவில் நால்ல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் 33008 பத்திரன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் குறித்த பகுதியில் இரவு வேளையில் கடமையில் ஈடுபட்டிருந்த போது , சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்தமையினால் அவரை சோதனையிட்ட போது, ​​சந்தேகநபர் அணிந்திருந்த சட்டையில் இரத்தக்கறை போன்ற ஒன்று சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 255,620/= பணம் இருந்ததை அதிகாரிகள் அவதானித்துள்ளனர். சந்தேகநபரின் பையில் இருந்து 01 தங்க நெக்லஸ், 02 மோதிரங்கள் மற்றும் கத்தி உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சந்தேகநபரின் பையில் 2002ஆம் ஆண்டு அரசியல் கட்சியொன்றை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டிருந்த அட்டை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், சந்தேக நபருடன் அந்த முகவரியில் உள்ள வீட்டுக்குச் சென்றபோது, ​​மூன்று பேர் வீட்டில் கொலையுண்டு இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இல. 168, பங்கதெனிய,சிலாபம் பகுதி சமரதுங்க விதானகே என்ற 42 வயதுடைய ரொஷான் சமரதுங்க என்ற கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம், நால்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக செய்திகள்

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் – சுமந்திரன் எம்.பி. ஒன்றரை மணிநேரம் பேச்சு!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிறீதரன் எம்பியுடன் கலந்துரையாடிய அக்னெஸ் கலமார்ட்! (Photos)

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுமந்திரன் மண்டியிட்டு அஞ்சலி! (Photos)

கொழும்பில் நடந்த இன மத பேதமற்ற நினைவேந்தல் நிகழ்வு (Photos & Video)

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

அனுரவின் சவாலை சஜித் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.. விவாதத்திற்கு நான் தயார்..- ஜனாதிபதி

போர்க் குற்றங்களுக்காக இலங்கை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஐநா மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது

போர்க் குற்றங்களுக்காக இலங்கை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஐநா மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.