கேளிக்கை வரி ரத்து செய்யப்படும்.
உள்ளுராட்சி அதிகாரிகளிடம் இருந்து அறவிடப்படும் கேளிக்கை வரியை இரத்து செய்வது தொடர்பில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், கேளிக்கை வரியை இல்லாதொழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள மூத்த கலைஞர்கள் குழு மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் பல இசைக்குழுக்கள் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து கேளிக்கை வரியை நீக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை ஜனாதிபதியின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் துசித ஹல்லொலுவ மேற்கொண்டுள்ளார்.