ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதே தமிழ் மக்களுக்கு இருக்கும் சிறந்த தெரிவு என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்போம், தமிழ் மக்களின் நலனைப் பற்றி சிந்திப்போம் என்ற தொனிப்பொருளில் விசேட அறிவிப்பொன்றை விடுத்து அக்கட்சி இதனைக் குறிப்பிட்டுள்ளது .
கட்டாய சிங்கள பௌத்தமயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கல் காரணமாக இலங்கை அரசாங்கம் வடக்கு – கிழக்கை விரோதப் பிரதேசமாகப் பார்ப்பதாக அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
ஒற்றையாட்சி முறைமையில் பெரும்பான்மை பலத்தை வைத்திருக்கும் இலங்கை அரசில் தமிழ் மக்கள் எவ்வித செல்வாக்கையும் கொண்டிருக்க முடியாது.
அவர்களைத் தங்கள் நாட்டு மக்களாகக் கருதாமல் அரசு எதிரிகளாகவே நடத்துகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்துகிறது.
அத்தகைய தலைமைத்துவத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்று அறிவிப்பதற்கு ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பது மட்டுமே ஒரே வழி.
இதன் மூலம் தமிழ் மக்களுடன் இலங்கை அரசு உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.