வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி இல்லாத போர்வீரர்களின் கொண்டாட்டம்
15வது தேசிய போர்வீரர்களின் கொண்டாட்டம் மற்றும் நினைவேந்தல் நிகழ்வு பத்தரமுல்லை பாராளுமன்ற மைதானத்திற்கு அருகில் உள்ள போர்வீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக இன்று இடம்பெற்றது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்றைய வைபவம் நடைபெற்றது.
2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளை தோற்கடித்த வெற்றியை கொண்டாடும் வகையிலும், அங்கு உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் வகையிலும் இந்த கொண்டாட்டம் நடத்தப்பட்டது.
கடந்த 15 வருடங்களாக போர் மாவீரர் கொண்டாட்டத்தில் நாட்டின் தளபதியான ஜனாதிபதி பங்குபற்றிய போதிலும், இம்முறை ஜனாதிபதி பங்குபற்றாதமை விசேட அம்சமாகும். அதேபோன்று தேசிய தொலைக்காட்சியும் போர்வீரர்கள் கொண்டாட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை.
இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10வது உலக நீர் உச்சி மாநாட்டிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சென்றுள்ளார்.