20ஆவது திருத்த வரைவுக்கு எதிராக 39 மனுக்கள் : நாளை உயர்நீதிமன்றத்தில் ஆராய்வு
20ஆவது திருத்த வரைவுக்கு
எதிராக 39 மனுக்கள் தாக்கல்
– நாளை உயர்நீதிமன்றத்தில் ஆராய்வு
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக இதுவரையில் 39 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இன்று மாத்திரம் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுலும் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இதன்படி 20ஆவது திருத்தத்துக்கு எதிரான அனைத்து மனுக்களும் நாளை செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்படவுள்ளன.