ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து ஜூன் முதல் அனல் கக்கும் கூட்டங்கள்!
மே தினக் கூட்டத்துக்குப் பிறகு, ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து ஆரம்பகட்ட கூட்டங்களை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மிகவும் பிரமாண்டமாக நடத்துவதற்குப் பிரதான அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் பிரதான அரசியல் கட்சிகள் பிரமாணடமாக நடத்தி இருந்தன. பெருமளவான மக்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்த பிரசாரக் கூட்டங்கள் ஜூன் மாதம் முதல் நடத்தப்படவுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் மக்கள் சந்திப்பு, ஜூன் 8 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்குரிய உத்தியோகபூர்வ பிரசாரக் கூட்டமாக இது அமையும் எனக் கருதப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பனவும் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. அதேவேளை, உத்தர லங்கா சபாகயவின் ஜனாதிபதி வேட்பாளரும் ஜூன் மாதமே பெயரிடப்படவுள்ளார்.