ரணிலே ஒரே தீர்வு! – மொட்டுக் கட்சியினருக்கு அமைச்சர் சுசில் அறிவுரை.

“ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவதே சிறந்தது. அவருக்கே சவாலை எதிர்கொண்ட அனுபவம் உள்ளது. இதனை மொட்டுக் கட்சியினர் கவனத்தில்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“புதிய அரசியல் கூட்டணிகள் விரைவில் உதயமாகும். எனவே, மக்கள் நலன் சார்ந்த அதேபோல் எமது கொள்கையுடன் ஒத்துப்போகக்கூடிய தரப்புடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பேன்.” – என்றார்.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தற்போது சுயாதீனமாகச் செயற்படுவதுடன், நிமல் லான்சா தரப்புடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.