சாலையில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு; குழந்தை உட்பட 5 பேர் படுகாயம் – பரபர சம்பவம்!

சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலைய வாசலில் சிலர் சாலையோரமாக தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த நபர் பெண் ஒருவர் மீது ஆசிட் பாட்டிலை வீசி விட்டு தப்பியோடியுள்ளார்.
அதில் பாட்டில் உடைந்து திராவகம் தெறித்ததில், 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட சிலர் காயமடைந்தனர். உடனே, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், குற்ற வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்று விட்டு ஜாமினில் வெளியே வந்த ராஜா என்ற நபர் ஆசிட் வீச்சு சம்பவத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
சாலையில் படுத்திருந்த பெண் ஒருவருக்கும் ராஜாவுக்கும் ஏற்கெனவே பகை இருந்துள்ளது. இதனால் இச்சம்பவம் அரங்கேறியுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக செய்திகள்
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி: மீட்புப் பணியில் சிக்கல் (Video)
SJBயுடன் விவாதங்களுக்கு வர முடியாது என NPP அறிவித்தது
வழக்காளியுடன் சுமுகத் தீர்வுக்கு இணக்கப் பேச்சு நடத்துங்கள்! – தமிழரசின் மத்திய குழு வழிகாட்டல்.
ஆளும் – எதிரணி எம்.பிக்கள் பலர் விரைவில் ஐ.தே.கவுடன் இணைவு?
மும்முனை விவாதமே வேண்டும்! – டிலான் வலியுறுத்து.
தமிழ்ப் பொது வேட்பாளர் திட்டம்: தமிழரசுக் கட்சி இணங்கவில்லை! – மத்திய குழு வேறு விதமாக முடிவு.
ஆம் ஆத்மி தலைவர் கைது நடவடிக்கையைக் கண்டித்து டெல்லியில் பரபரப்பு; ஊரடங்கு அமல்.
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான துபாய் ஊடக விசாரணையில் சிங்கப்பூர் சந்தேக நபர்களின் பெயர்கள்.
ஈரான் ஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்து?
ஈரான் அதிபர் ரைசி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்து மிகுந்த கவலை அளிக்கிறது: மோடி