ரணிலைப் போலவே அனுரகுமாரவும் நாட்டை தொடர்வதானால் , அவர்கள் எதற்கு ? – சுகீஸ்வர பண்டார
பரிசோதனை செய்யக்கூடிய நிலையில் நாடு இல்லை என தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பில் சுகீஸ்வர பண்டார கருத்து தெரிவித்துள்ளார்.
“தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, அண்மைய தொலைக்காட்சி கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்ட போது , தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செல்லும் கயிற்று பாலத்தில் தொடர்ந்து பயணிக்கப் போகிறோம் என்றால், இந்த நாட்டில் தேசிய மக்கள் படைக்கு ஏன் , இன்னும் பரிசோதனை செய்ய அதிகாரம் கொடுக்க வேண்டும்? இன்னும் சோதனைகள் செய்யக்கூடிய சூழ்நிலையிலா இந்த நாடு உள்ளது என்பதை , மக்கள் முடிவு செய்ய வேண்டும். கயிற்று பாலம் வழியாக நாட்டை கடந்து, புதிய சோதனைகளை செய்து நாட்டை மீண்டும் படுகுழியில் தள்ளுவதா என மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் ” என்றார் சுகீஸ்வர பண்டார.
ரோஹன விஜேவீர, ஜனதா விமுக்தி பெரமுனவை உருவாக்கியதன் மூலம், ஜே.வி.பி நாட்டிற்கு எந்த நன்மையையும் செய்யவில்லை, ஆனால் அவர்கள் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், கொலைகள், சொத்து அழிப்புகள் போன்றவற்றையே செய்தார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார மற்றும் மேல்மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கமுனு விஜேரத்ன, ஜே.வி.பி.யின் முன்னாள் எம்.பி, எஸ். அமரசிங்க, புதிய ஜனதா பெரமுனவின் பிரதித் தலைவர் உபதிஸ்ஸ குமாரதுங்க ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
மகா சங்கத்தினர், இந்து, கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் மதகுருமார்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் தாராநாத் பஸ்நாயக்க, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட அதிதிகள் மற்றும் மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.