பகுதி நேர வேலையாக கள்ள சாராயம் (கசிப்பு) விற்ற சப் இன்ஸ்பெக்டர் கைது.
கசிப்பு விற்றமை தொடர்பில் கடமையிலிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் நேற்று (19) திரப்பனை பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த உப பொலிஸ் பரிசோதகர் கசிப்பு விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், திரப்பனை காவற்துறையினர் நேற்று முன்தினம் (19) மாலை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வசிக்கும் மிஹிந்தலய நொச்சிக்குளம் வீட்டை சோதனையிட்ட போது , அந்த வீட்டில் 1420 மிலி லீட்டர் கசிப்பு அடங்கிய பீப்பாய் ஒன்றும், கசிப்பு வடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த அதிகாரி கசிப்பை உருவாக்க எரிவாயு அடுப்பை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.