போலிச் செய்திகளை நம்பாதீர்கள்! இன்று பாடசாலைகள் இயங்கும்!! – கல்வி அமைச்சு அறிவிப்பு.
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று வழமை போன்று இடம்பெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி போலியானது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலைகளை நடத்துவது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்வி பணிப்பாளர்கள் வசம் உள்ளது என்றும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.