ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு அநுரகுமார இரங்கல்!

ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு இன்று சென்ற அநுரகுமார திஸாநாயக்க எம்.பி., அங்கு வைக்கப்பட்ட இரங்கல் குறிப்பேட்டில் தனது இரங்கலைப் பதிவு செய்தார்.