ஈரான் அதிபர் தேர்தல் தேதியை அந்நாட்டு அரசு அறிவித்தது.
ஈரான் அதிபர் தேர்தல் தேதியை அந்நாட்டு அரசு நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஈரான் நாட்டின் உயர் மதத் தலைவரும், அந்நாட்டு அதிபருமான இப்ராஹிம் ரைசி, 63, கடந்த 19-ம் தேதியன்று ஈரான் – அஜர்பைஜான் எல்லையில் கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக, ஹெலிகாப்டரில் இப்ராஹிம் ரைசி , வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமிர் அப்தொலஹின் உள்ளிட்டோர் சென்றபோது, மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில் ஈரானின் அரசியலமைப்பின் 131வது பிரிவின்படி, 50 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதன்படி ஈரானின் அதிபர் தேர்தல் ஜூன் 28ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.