நான் ‘பயலாஜிக்கலாக’ பிறக்கவில்லை; மனிதப் பிறவி அல்ல: மோடி
நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஸாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, பிரதமர் நரேந்திர மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடி பேசியதாவது:
“நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன். மனிதப் பிறவியாக இருக்க வாய்ப்பில்லை. என்னை பூமிக்கு அனுப்பியது பரமாத்மாதான்.
ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளார். நான் பெற்றிருக்கும் ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றது கிடையாது. கடவுளால் மட்டுமே இதை கொடுக்க முடியும்.” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி
கடந்த திங்கள்கிழமை புரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ராவை ஆதரித்து பிரதமர் மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார். தொடர்ந்து, செய்தியாளர்களுடன் பேசிய சம்பித் பத்ரா, “புரி ஜெகந்நாதர் பிரதமர் மோடியின் பக்தர்” என்று தெரிவித்திருந்தார்.
ஜெகந்நாதரை அவமதிக்கும் விதமாக இந்த கருத்து உள்ளதாக ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்ட சம்பித், மோடி ஜெகந்நாதரின் பக்தர் எனக் கூறுவதற்கு பதிலாக வாய் தவறி கூறிவிட்டதாக மன்னிப்பு கோரியதுடன், 3 நாள்கள் விரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி தான் மனிதப் பிறவி இல்லை என்று பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக செய்திகள்
விமானப் பயணி ஒருவர் மரணம், 30 பேர் காயம் , தற்போதைய நிலவரம்?
தலைமறைவான டயனா நீதிமன்றில் ஆஜர்.
குழு மோதலில் குடும்பஸ்தர் கொலை!
போலிச் செய்திகளை நம்பாதீர்கள்! இன்று பாடசாலைகள் இயங்கும்!! – கல்வி அமைச்சு அறிவிப்பு.
கல்லால் தாக்கி மனைவியைக் கொலை செய்த கணவர் கைது!
யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்த இரண்டு மாதிரித் திட்டங்கள்!
ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு அநுரகுமார இரங்கல்!
இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் , இந்தியாவில் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டம்.
போரில் தோற்கிறதா உக்ரைன்? சுவிசிலிருந்து சண் தவராஜா.
ரஷ்யா அனுப்பிய ஆளில்லா வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.