ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்குக் கொழும்பிலுள்ள தூதரகத்துக்குச் சென்று இரங்கல் தெரிவித்த ரணில்!

கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்துக்கு இன்று காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்துக்குத் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
தூதரகத்துக்குச் சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரீஸா டெல்கோஷ் உள்ளிட்ட பணிக்குழாம் வரவேற்றது.
ஈரான் ஜனாதிபதியின் மறைவு குறித்து ஈரான் தூதுவர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் இரங்கல் குறிப்பைப் பதிவிட்ட பின்னர், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்துக்கு ஈரான் அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் தனதும், இலங்கை அரசினதும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.