திசைகாட்டிக்கு (NPP) அச்சிடப்பட்ட பொருளாதாரக் கொள்கை ஒன்று இல்லை.. வாயால் சொல்வதே கொள்கை..- நளிந்த ஜயதிஸ்ஸ (Video)
தமது கட்சியின் பொருளாதாரக் கொள்கையோ வேலைத்திட்டமோ அச்சில் வெளியிடப்படாவிட்டாலும் தமது கட்சியின் உறுப்பினர்கள் கூறுவதையே பொருளாதாரக் கொள்கையாகக் கருத முடியும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சிரச தொலைக்காட்சியின் ‘சட்டன’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ள பொருளாதாரக் குழு, விவாதத்தில் பங்கேற்காது என்று கூறிய அவர், தலைவர்களுக்கு இடையேயான விவாதத்தை முதலில் நடத்தியிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பொருளாதார குழு விவாதத்தை தேசிய மக்கள் சக்தி தவிர்த்து வருவதாகவும், பொருளாதார வேலைத்திட்டமோ அல்லது அதனை முன்வைக்கும் குழுவோ தங்களிடம் இல்லாததே காரணம் எனவும் விவாதத்தில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.
அந்த குழுவில் உள்ள பல்வேறு நபர்கள் வெவ்வேறு நேரங்களில் முரண்பட்ட பொருளாதார பிரச்சினைகளை முன்வைப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.