பலாங்கொடையில் மரம் முறிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் மரணம்!

பலாங்கொடை, ஹெரமிட்டிகல பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் இருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை, ராசகல – ஹெரமிட்டிகல 54 ஆம் பிரிவைச் சேர்ந்த 44 வயதுடைய த.சுப்பிரமணியம் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்.