தரம் 5 மாணவி பஸ் மோதி பலி! – கம்பளையில் சோகம்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பஸ் மோதி பாடசாலை மாணவியொருவர் பலியாகியுள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் (22) காலை இடம்பெற்றுள்ளது.
பேரவிலயிலிருந்து கம்பளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸே, உடஹேந்தன்ன சேனாதீர தேசிய பாடசாலைக்கு முன்னால் மாணவி மீது மோதியுள்ளது.
படுகாயமடைந்த தரம் 5 இல் கல்வி பயிலும் ஹன்சமாளி என்ற 10 வயது மாணவி, குருந்துவந்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குருந்துவந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.