உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் ஒத்திகை துவங்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் ஒத்திகை துவங்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யா எதிர்பார்க்காத அளவுக்கு உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்ற ரஷ்யாவின் கனவும் தவிடுபொடியானது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை கடந்தும் இன்னும் நீடித்து வருகிறது.
சமீபத்தில் ரஷ்யாவின் இறையாண்மையை காக்க அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என ரஷ்ய அதிபர் புடின் பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் அணு ஆயுத தாக்குதல் நடத்தக் கூடாது என ரஷ்யாவுக்கு உலக நாடுகள் வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில் உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் ஒத்திகை துவங்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.