அரசு பேருந்தில் இலவச பயணத்திற்கு இது கட்டாயம்… காவலர்களுக்கு போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு
சீருடையில் பணிக்கு செல்லும் போக்குவரத்து ஊழியர்களுக்கு இலவச பேருந்து பயண சலுகையை அரசு வழங்கும்போது, தங்களுக்கும் அதே சலுகை உண்டு என்று காவலர் வாக்குவாதம் செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
செட்டிக்குளம் பணி மனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி சென்ற பேருந்தில், காவலர் ஆறுமுகசாமி என்பவர் பயணித்தார். சீருடையில் பணிக்கு சென்ற காரணத்தால், அரசுப் பேருந்தில் அவர் டிக்கெட் எடுக்கவில்லை.
ஆனால், வாரண்ட் இருந்தால் மட்டுமே இலவச பயணம் என்று நடத்துநர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் காவலர் டிக்கெட் எடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாரண்ட் இருந்தால் மட்டுமே காவலர்கள் இலவசமாக பயணிக்க முடியும் என்றும், மற்ற நேரங்களில் காவலர்கள் இலவச பயணம் செய்ய முடியாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.
மேலும் வாக்குவாதம் செய்த காவலர் ஆறுமுகசாமி மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும், காவல்துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலதிக செய்திகள்
பிரிட்டிஷ் பிரதமர் திடீர் தேர்தலுக்கு அழைப்பு
ரைசியின் கடைசி சில நிமிடங்களைப் பற்றி ரைசியோடு பயணித்த தலைமை அதிகாரி
மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்ற தாய்!
புத்தளத்தில் மரங்கள் வீழ்ந்து இரு பெண்கள் பரிதாபச் சாவு.
பலாங்கொடையில் மரம் முறிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் மரணம்!
இங்கையில் நீதி மரணித்துவிட்டது! பொலிஸ் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது!! – சிறீதரன் எம்.பி. காட்டம்.
‘எலிமினேட்டர்’ போட்டியில் பெங்களூரு அணி பரிதாபமாக வெளியேறியது.
பிரிட்டன் ஜூலை 04-ம் தேதி பொதுத்தேர்தல்.
உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் ஒத்திகை துவங்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.