ரணிலுக்கும் அநுரவுக்கும் இடையில் மறைமுக ஒப்பந்தம் முஜிபுர் தெரிவிப்பு.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் NPP தலைவர் அனுர திஸாநாயக்கவை முன்னிலைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்து வருவதாக SJB நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஜனாதிபதிக்கும் அநுர திஸாநாயக்கவுக்கும் இடையில் ஒரு சிறந்த உறவு கட்டியெழுப்பப்பட்டதாகவும், மே தினத்தை ஏற்பாடு செய்வதில் அரசாங்கத்தின் ஆதரவு , அதை நன்கு பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.
மே தின பேரணிக்கு NPP கோரிய இடத்தை அரசாங்கம் வழங்கியதாகவும், ஆனால் SJB முதலில் அதே இடத்தைக் கோரிய போதும் அதனை வழங்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன் மூலம் ஜனாதிபதி , அநுர திஸாநாயக்கவுக்கு உதவுவதுடன் SJBக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.