அடுத்த ஆண்டு முதல் GCE (O/L) பாடங்களை மாற்ற முடிவு! பாடத்திட்டம் எப்படி மாறுகிறது பாருங்கள்!
க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் கணிதம், மதம், மொழி போன்ற பாடங்களில் சித்தியடையாவிடினும், பரீட்சையில் சித்தியடையாதவர்களாகக் கருதக் கூடாது என இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
இதன்படி, க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பாடத்திட்டத்தில் திறன் அல்லது தொழில்முறை பாடத்தை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், புதிய ஆண்டு முதல் அதனை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
சமூகத்தை வலுவூட்டும் வகையில் கல்வி முறையில் மாற்றம் வரவேண்டும் என்பதை நாம் முன்வைத்த பிரதான சித்தாந்தமாக இதனை கூறலாம். அதன்படி, கணிதம், மதம், மொழி போன்ற பாடங்களில் சித்தியடையாவிடினும் தேர்வில் சித்தியடையாததாகக் கருதக் கூடாது.
எனவே, க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பாடத்திட்டத்தில் திறன் அல்லது தொழிற்கல்வி பாடத்தை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது சமூகம் ஏற்றுக்கொண்ட கருத்து என்றும் சொல்லலாம்.
இதன்படி, புத்தாண்டு முதல் இதனை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கேற்ப, ஒரு முழுமையான நிபுணத்துவத்தை உருவாக்குவதற்குத் தேவையான கல்விச் சீர்திருத்தங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.