1700 கொடுக்காத கம்பனிகள் இரத்து செய்யப்பட்டு , உடன்படும் தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கப்படும்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு நிரந்தரமாக அமுல்படுத்தப்படும் என பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சம்பள அதிகரிப்புக்கு உடன்படாத அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இவ்வாறு இரத்துச் செய்யப்பட்ட தோட்டக் கம்பனிகளின் ஒப்பந்தங்கள் வெளிப்படைத் தன்மையுடன் உடன்படும் ஏனைய தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கான உத்தேச வர்த்தமானிக்கு மேலதிகமாக கடந்த 21ஆம் திகதி தற்போதைய வர்த்தமானி வெளியிடப்பட்டதுடன், அன்றைய தினம் முதல் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1350 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாயுடன் 350 ரூபா விசேட கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“அரசுக்குச் சொந்தமான தோட்டக் காணிகளை குத்தகைக்கு எடுத்த சுமார் 24 தோட்டக் கம்பனிகள் உள்ளன. அவர்களில் எவரேனும் இந்த அதிகரிக்கப்பட்ட தொகையை செலுத்த முடியாது என கூறினால், நிதியமைச்சகம் அது தொடர்பில் ஆராய குழுவொன்றை நியமிக்கும்.
“1995 ஆம் ஆண்டு முதல் தோட்டங்களை குத்தகைக்கு எடுத்துள்ள ஒரு குழு இந்த வகையான சம்பளத்தை வழங்க முடியாவிட்டால், அது வெளிப்புற பிரச்சனையா அல்லது அவர்களின் உள் பிரச்சனைகளால் ஏற்பட்டதா என்பதை முதன்மையாக இந்த குழு விசாரிக்கும்.” ”
அதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க முடியாதது அவர்களுக்கு உள்ளகப் பிரச்சினையாக இருந்தால், அந்த நிறுவனங்களுடனான குத்தகை ஒப்பந்தங்களை ரத்து செய்து, புதிய முதலீட்டாளர்களுக்கு இந்தத் தோட்டங்களை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது.
இங்கு, புதிய முதலீட்டாளர்களுக்கு சிறப்பு வெளித்தன்மையுடன் மட்டுமே தோட்டங்கள் வழங்கப்படும், மேலும் ஏற்றுமதி சார்ந்த, பணியாளர் நலன், உள்கட்டமைப்பு, புதியவற்றைப் பயன்படுத்துதல், தொழில்நுட்பம் போன்ற போன்ற விஷயங்களைக் கவனித்துக்கொள்ளக்கூடிய புதிய குழுவிற்கு மிகவும் போட்டி முறையின் கீழ் புதிய குத்தகைகள் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.