என் மகன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் கற்பது, திசைகாட்டி கொள்கையை மீறியது அல்ல – சுனில் வட்டகல.

கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் கற்கும் , தனது மகனின் கல்வியானது தமது கட்சியின் கொள்கைக்கு அமைவாக உள்ளதாக தேசிய மக்கள் படையின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியாக தாம் தனியார் கல்விக்கு எதிரானவன் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழக சட்டமூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மீறுவதால் அதனை எதிர்த்ததாக அவர் கூறினார்.