16 வயதில் சாதனை – எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 12ஆம் வகுப்பு மாணவி அசத்தல்!
8,849 மீட்டர் உயர எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி காம்யா கார்த்திகேயன் என்ற 12ஆம் வகுப்பு மாணவி அசத்தல் சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
மும்பை நேவி சில்ட்ரன் பள்ளியில் 12ஆம் படிக்கும் 16 வயதான காம்யாவும், அவரது தந்தை கார்த்திகேயனும் கடந்த மாதம் ஏப்ரல் 3ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி பயணத்தை தொடங்கினர். பின்னர், மே 20ஆம் தேதி 8,849 மீட்டர் உயரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் 7 கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரத்தின்மீது ஏறும் சவாலில் இதுவரை 6 சிகரங்களை காம்யா கண்டுள்ளார் என்று கூறி எக்ஸ் பக்கத்தில் கடற்படை வாழ்த்து தெரிவித்துள்ளது.
காம்யா கார்த்திகேயன் முன்னதாக, 2015ஆம் ஆண்டில் 12 ஆயிரம் அடி உயர சந்திரசிலா சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார். பின்னர், 2016ஆம் ஆண்டு 13,500 அடி உயர ஹர் கி டூன் சிகரத்தையும் தொட்டார். பின்னர், 2017ல் ரூப்குண்ட் ஏரி மற்றும் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் ஆகியவற்றிலும் ஏறி காம்யா கார்த்திகேயன் அசத்தினார்.
கடந்த 2020ஆம் ஆண்டு லத்தீன் அமெரிக்காவில் உள்ள அகோன்காகுவா மலையில் ஏறி சாதனை படைத்தார். அப்போது, மனதின் குரல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இளம்பெண் காம்யா கார்த்திகேயன் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக பாராட்டினார். அத்துடன், காம்யா கார்த்திகேயன் உயரமான சிகரங்களை ஏறியதற்கு பாராட்டும் விதமாக பிரதமரின் தேசிய பால் சக்தி விருதை வென்றுள்ளார்.
காம்யா கார்த்திகேயனின் ஏழாவது பயணமாக வருகிற டிசம்பர் மாதம் அண்டார்டிகாவில் உள்ள வின்சன் மாசிஃப் மலையில் ஏறி 7 சம்மிட் சேலஞ்சை நிறைவு செய்யும் இளம்பெண் என்ற சாதனையை படைக்க உள்ளார்.
மேலதிக செய்திகள்
தமிழ்ப் பொது வேட்பாளரை உங்களால் நிறுத்த முடியாது! – விக்கியிடம் ரணில் தெரிவிப்பு.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அநுரவின் ஆட்சியில் தீர்வு உறுதி! – விஜித ஹேரத் எம்.பி. தெரிவிப்பு.
யாழ். போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் சண்டித்தனம்! – மூவர் கைது.
குஜராத் மாலின் கேமிங் சென்டரில் பயங்கர தீ விபத்து : 27 பேர் உயிரிழந்த சோகம்
தில்லி குழந்தைகள் நல மருத்துவமனையில் தீ விபத்து: 6 பச்சிளம் குழந்தைகள் பலி