26ம் திகதி, ஜனநாயக மக்கள் முன்னணி கேகாலை மாவட்ட மாநாடு : மனோ கணேசன் எம்பி தலைமையில்….

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளி கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட மாநாடு, நாளை எட்டியாந்தோட்டை நகரில், ஸ்ரீ விநாயகர் ஆலயத்துக்கு எதிரே, கே.ஜி .எல். குணவர்த்தன மண்டபத்தில், கட்சி தலைவர், கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும். கூட்டணியின் பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம் எம்பி, வே. இராதாகிருஷ்ணன் எம்பி, கேகாலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பிரமுகர்கள் கபீர் ஹசீம் எம்பி, சுஜித் சஞ்சய் பெரேரா எம்பி, ஜனநாயக மக்கள் முன்னணி பிரதி தலைவர் வேலு குமார் எம்பி ஆகியோர் உட்பட கட்சி, கூட்டணி அரசியல் குழு உறுப்பினர்களும், விசேட அழைப்பாளர்கள், மாவட்ட கட்சி அங்கத்தவர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணீதரன் முருகேசு பொறுப்பெற்றுள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக வலய, தோட்ட பிரிவு வலய, நகர வலய அமைப்பாளர்களின் தலைமையிலான செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய முழு மாவட்டம் தழுவிய கட்டமைப்பு மாநாடாக இந்நிகழ்வு, “ஒன்றிணைந்து வெல்வோம்! தேசிய அரங்கில் இடம்பெறுவோம்!” என்ற தொனிபொருளில் நடைபெறும் என பரணீதரன் முருகேசு தெரிவித்துள்ளார்.