நான் ஜனாதிபதியாக பதவியேற்றதும் 25 மாவட்டங்களிலும் ஜனாதிபதி அலுவலகங்கள் அமைக்கப்படும்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஜனாதிபதி அலுவலகங்களை அமைக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் மக்கள் தமது மாவட்டத்தின் பிரதான நகருக்கு வந்து ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக தமது பிரச்சினைக்கான தீர்வை வினைத்திறனுடன் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் SJB ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நாட்டின் வரலாற்றில் எந்த ஒரு தலைவரும் எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்காக உழைக்கவில்லை எனவும், தாம் எதிர்க்கட்சியில் இருந்து மக்களுக்காக பணியாற்ற ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.