சீதாவும் , அனுராதாவும் ஜனாதிபதிப் போட்டியில் ….
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் புதிய அரசியல் அமைப்பில் பெண்களின் பற்றாக்குறையை நிரப்புவதற்கு முன்னாள் கிழக்கு ஆளுநர் அனுராதா யஹம்பத்தை பயன்படுத்துவதற்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரை முன்வைப்பதற்கு உரிய அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்ப பாடுபடுவேன் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விஜேதாச ராஜபக்சவை வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாகவும் மைத்திரிபால சிறிசேன அறிவித்ததையடுத்து உருவாக்கப்படவுள்ள கூட்டணியின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரசார நடவடிக்கைகளில் இராஜாங்க அமைச்சர் கலாநிதி சீதா ஆரம்பேபொல நேரடியாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தீவிர ராஜபக்ச ஆதரவாளரான அனுராதா யஹம்பதை , புதிய கூட்டணியில் தீவிரமாக பங்கேற்க வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.