தைவானை சுற்றி முழு படையை இறக்கியது சீனா! 21 போர் விமானங்கள்! 11 கடற்படை கப்பல்கள்!
தைவான் சீனாவின் ஒரு அங்கம் என்று அந்நாடு தொடர்ந்து உரிமை கொண்டாடி வரும் நிலையில், தற்போது தைவானை சுற்றி தனது 21 போர் விமானங்கள், 11 கடற்படை கப்பல்களை சீனா நிலை நிறுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தைவான் தனிப்பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. உலக நாடுகள் அமெரிக்கா உட்பட, தைவான் என்பது சீனாவுடன் இணைந்த பகுதி என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக அமெரிக்கா தைவானுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. இதனால் தைவான் சீனாவுக்கு எதிராக திரும்பியிருக்கிறது.
அதாவது சீனாவை கலந்தாலோசிக்காமல் தைவான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, ஒப்பந்தம் மேற்கொள்வது என அமெரிக்கா சில நடவடிக்கையில் இறங்கியது. இது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருந்த உரசல்களை மேலும் தீவிரமாக்கியது.
இந்நிலையில் கடந்த 2022ல் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றிருந்தார். இது சீனாவுக்கு ஆத்திரமூட்டவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானை ஒட்டியுள்ள கடற்பரப்பில் சீனா போர் பயிற்சியை மேற்கொண்டது.