பிரிட்டன் தேர்தல் அறிவிப்பு வந்த மறுநொடி.. ராஜினாமா செய்துவிட்டு ஓடிய 78 எம்பிக்கள்.. தடுமாறும் ரிஷி சுனக்.
பிரிட்டன் நாட்டில் திடீரென சுமார் 80 எம்பிக்கள் ராஜினாமா செய்துள்ளனர். வரும் ஜூலை 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பிரிட்டன் நாட்டில் கடந்த 2022 முதல் பிரதமராக இருப்பவர் ரிஷி சுனக்.. அடுத்தடுத்து இரு பிரதமர்கள் விலகி, பிரிட்டன் பொருளாதாரம் மிகவும் மோசமான சூழலில் இருந்த போது பிரதமராகப் பதவியேற்றவர் ரிஷி சுனக்.
அதன் பிறகு அவர் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் பிரிட்டன் பொருளாதாரம் சற்று மேம்பட்டுள்ளது. இருப்பினும், நிலைமை முழுமையாகச் சீராகாததால் அந்நாட்டு மக்கள் கோபத்தில் தான் உள்ளனர்.
தற்போதுள்ள பிரிட்டன் நாடாளுமன்றம் அடுத்தாண்டு தொடக்கத்தில் தான் நிறைவடைகிறது. அதாவது அடுத்தாண்டு வரை தேர்தல் நடத்தத் தேவையில்லை.. இருப்பினும், ரிஷி சுனக் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்துத் தேர்தலை அறிவித்துள்ளார்.