ராஃபா எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட எகிப்திய படை வீரர்.
எகிப்தையும் காஸா முனையையும் இணைக்கும் ராஃபா எல்லைப் பகுதியில் தனது பாதுகாப்புப் படை வீரர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்துவதாக எகிப்து தெரிவித்துள்ளது.
எல்லைப் பகுதியில் எகிப்திய வீரர்களுக்கும் இஸ்ரேலிய வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது குறித்து விசாரணை நடத்துவதாக இஸ்ரேல் கூறியது.
“மே 27ஆம் தேதியன்று எகிப்திய எல்லைப் பகுதியில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. எகிப்தியர்களுடனான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன,” என்று இஸ்ரேலிய ராணுவம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
இத்தகைய சம்பவம் மீண்டும் நிகழாதிருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எகிப்து தெரிவித்தது.
தனது பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டால் பின்விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்று எகிப்து எச்சரிக்கை விடுத்தது.