சடலமாக மீட்கப்பட்டார் 15 வயது நானுஓயா தமிழ் மாணவி

ஊர் மக்களும் இணைந்து தேட ஆரம்பித்தனர். இந்தநிலையில் இன்று காலை தோட்டத்தொழிலாளர்கள் சிலர் கொழுந்து கொய்வதற்கு சென்றுக்கொண்டிருக்கையிலேயே வீட்டுக்கு அருகில் உள்ள ஆற்றில் யசோதா சடலமாகக் கிடப்பதை கண்டு அறிவித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்ட நீதிபதி மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.