ரஷ்யா அனுப்பிய 13 ஆளில்லா வானூர்திகளை உக்ரேன் சுட்டு வீழ்த்தியது.
இரவு நேரத்தில் உக்ரேனை நோக்கி ரஷ்யா 14 ஆளில்லா வானூர்திகளை அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவற்றில் 13 ஆளில்லா வானூர்திகளை உக்ரேனிய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டின் விமானப் படை டெலிகிராம் செயலி மூலம் மே 29ஆம் தேதியன்று தெரிவித்தது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா வானூர்திகளின் பாகங்கள் உக்ரேனின் வடமேற்குப் பகுதியில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பு மீது விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.
சில இடங்களில் மின்சாரக் கம்பங்கள் சேதமடைந்ததாகவும் அவற்றைப் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெறுவதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே, உக்ரேனின் மைக்கோலைவ் பகுதிக்கு மேல் பறந்த 11 ஆளில்லா வானூர்திகளை அந்நாட்டு விமானப் படை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன் விளைவாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.