அமுனுகம இராஜினாமா செய்த பின் திலித்துக்கு கொடுத்த கொரில்லா தாக்குதல்
மௌபிம ஜனதா கட்சியில் இனவாதிகள் இணைந்து கொண்டதன் காரணமாக கட்சியின் தலைவர் பதவி மற்றும் அனைத்து பதவிகளில் இருந்தும் தான் இராஜினாமா செய்ததாக முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தனது முழு அரசியல் வாழ்விலும் தீவிரவாதிகளுடனோ அல்லது இனவாதிகளுடனோ பயணித்ததில்லை என்றும் அவர் கூறுகிறார்.
சந்தர்ப்பவாதத்தையும் மக்களை கவருவதையும் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் திரு.அமுனுகம தெரிவித்தார்.
அரசியலும் தீவிரவாதமும் வெவ்வேறானவை என சுட்டிக்காட்டிய அவர், இன்றும் நாளையும் தீவிரவாதத்தையும் இனவாதத்தையும் நிராகரிப்பதாக தெரிவித்தார்.
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருடன் மௌபிம ஜனதா கட்சி இணைந்து செயற்படுவதை தாம் ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் தான் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ததாகவும் அவ்வாறானவர்களுடன் சென்றவர்களின் கதி என்ன என்பதற்கு எடுத்துக்காட்டுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டு முறை அல்ல, பலமுறை அப்படிப்பட்ட கூட்டணி பற்றி யோசித்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.