பொருளாதார விவாதத்திற்கு செல்லாவிட்டால் , பொருளாதார கொள்கைகள் இல்லை என மக்கள் நினைப்பார்கள்..- திசைகாட்டி மணி உள்ளக மோதல்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் சவால் விடுக்கப்பட்டுள்ள பொருளாதார குழு விவாதத்தில் தமது கட்சி பங்கேற்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைவர்களுக்கிடையிலான விவாதம் அநுர திஸாநாயக்கவுக்கு சாதகமாக உள்ளதாக பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்தான போதிலும், பொருளாதார குழு விவாதத்தை தேசிய மக்கள் சக்தி தவிர்த்து வருவதாக மக்கள் மத்தியில் அவநம்பிக்ககான கருத்து நிலவுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொருளாதாரக் குழு விவாதத்தில் பங்கேற்காமல் இருப்பதன் மூலம், NPP கட்சியில் பொருளாதார நிபுணர்கள் இல்லை என்ற கருத்து, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரிடையே ஏற்படும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமது கட்சியின் அரசாங்கத்தின் கீழ் நாட்டை மீட்பதற்கான பொருளாதார வேலைத்திட்டம் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட பொருளாதார வேலைத்திட்டம் இல்லாத காரணத்தினால் பல சந்தர்ப்பங்களில் தாம் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, ஒரு குறிப்பிட்ட பொருளாதார வேலைத்திட்டம் விரைவில் NPPயால் வெளியிடப்பட வேண்டும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளன.