பாலிதவின் கருத்து முட்டாள்தனமானது! தேர்தல்களை ஒத்திவைக்க இடமளியோம்!! – சஜித் சூளுரை.

இரண்டு பிரதான தேர்தல்களையும் ஒத்திவைக்க நாம் ஒருபோதும் இடமளியோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், ஐ.தே.க. – மொட்டுக் கட்சிகளும் தோல்விப் பயத்தில் ஜனாதிபதித் தேர்தலையும், நாடாளுமன்றத் தேர்தலையும் ஒத்திவைக்க முயற்சிக்கின்றன.
இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடமளியாது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரின் கருத்து முட்டாள்தனமானது. அவரின் யோசனைக்கு நாட்டின் அரசமைப்பில் இடமேயில்லை.
அரசமைப்பின் பிரகாரம் பிரதான இரண்டு தேர்தல்களையும் அரசு நடத்தியே தீர வேண்டும். இரண்டு தேர்தல்களையும் எதிர்கொள்ள நாம் தயாராகவுள்ளோம்.” – என்றார்.