தோட்ட முதலாளிகளை அவர்களது பெண்டாட்டியை விட சிறப்பாக கவனித்தேன் – ஜீவன்
நுவரெலியா பொரலந்த பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்தும் விதம் முற்றிலும் தவறானது என நீர் வழங்கல் மற்றும் தோட்ட வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இடம்பெற்ற விமான விபத்தில் துரதிஷ்டவசமாக உயிரிழந்த இப்றாஹிம் ரைஷு அவர்களுக்காக, தலவாக்கலை பிரதான ஜும்மா பள்ளிவாசலில் நடந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு, வெளியே வந்து பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மரணமடைந்த ஈரான் ஜனாதிபதிக்கான இறுதி அஞ்சலிகள் மற்றும் விஷேட பிரார்த்தனைகள், இஸ்லாமிய முறைப்படி , தலவாக்கலை பிரதான பள்ளிவாசல் மௌலவி அப்துல் மஜீத் மொஹமட் நியாஸ் அஷிமி தலைமையில் இடம்பெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:
மலையக மக்களிடம் ஒரு பிரச்சனை இருக்கும் போது, நான் அதை பற்றி கேட்கவில்லை என்றால், நீங்கள் அதை பற்றி ஏன் கேட்கவில்லை, என ஊடகங்களில் உள்ள நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காக பேசவில்லை என்கிறீர்கள்?
மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை கேள்வி எழுப்பி அதற்கான உரிய தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுத்தால், வரப்போகும் தேர்தலை நினைத்து சண்டித்தனமாக , எதிர்வரும் தேர்தலுக்காக நாடகம் நடத்துவதாக கூறுகிறீர்கள்?
ஆனால் உண்மையில் நடந்தது அதுவல்ல, நாங்கள் சரியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தோம், அவர்கள் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாட்டிற்கு வரவில்லை.
தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிந்து, அப்பாவி தோட்டத் தொழிலாளர்களை தொழிற்சாலைகளுக்குள் அடைத்தார்கள் , அவர்களைத்தான் வெளியே அழைத்துச் வந்து தொழில் நடவடிக்கையை ஆரம்பித்தோம்.
எஸ்டேட் நிர்வாகம் அவர்களைத் தடுத்து சிறைப்படுத்தியதாக பரப்புரை செய்கிறார்கள் , ஆனால் நடந்தது அப்படி இல்லை, அவர்களுக்கு டீ, பிஸ்கட், தண்ணீர் மற்றும் 27 வகையான மருந்துகளை கொண்டு வந்தது நான்.
இந்த விஷயங்கள் ஊடகங்களில் பேசப்படுவதில்லை, ஏனென்றால் எமது பக்க நல்லதை சொல்ல ஊடகங்கள் விரும்பவில்லை. எங்கள் தவறுகளை மட்டுமே சொல்கின்றன.
சுருக்கமாக, நேற்று மதியம் மூன்று மணி நேரத்திற்குள் அந்த அதிகாரிகளை அவர்களின் மனைவிகளை விட அருமையாக நான் கவனித்துக்கொண்டேன்,
முன்னாள் அமைச்சர் என் மீது குற்றம் சுமத்தியிருந்தார் ஆனால் நான் யாரையும் குறை கூறப் போவதில்லை, சொன்ன அமைச்சரிடம் என்றால் தொப்பி அளவென்றால் போட்டுக் கொள்ளுங்கள் என்கிறேன் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறினார்.