அருணாச்சல், சிக்கிம் பேரவைத் தேர்தல் – முன்னணி நிலவரம்!
மக்களவைத் தேர்தலுடன், பேரவைத் தேர்தல் நடைபெற்ற அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் வாக்கு எண்ணும் பணி இன்று(ஜூன் 2) காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அருணாச்சலில் 60 பேரவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் 32 பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
அருணாச்சலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் முதல்வர் பீமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
காலை 8 மணி நிலவரப்படி, அருணாச்சல் பிரதேசம் (மொத்த தொகுதிகள் 60) வாக்கு எண்ணிக்கை – முன்னணி நிலவரம்:
பாஜக –> 36 இடங்கள்
காங்கிரஸ் –> 1
என்பிபி –> 6
இதர கட்சிகள் –> 6
அருணாச்சல் பிரதேசத்தில் தற்போதைய நிலவரப்படி பாஜக 36 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில்,மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் என்றும், பீமா காண்டு மீண்டும் முதல்வர் ஆவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன
சிக்கிம் (மொத்த தொகுதிகள் 32) வாக்கு எண்ணிக்கை – முன்னணி நிலவரம்:
எஸ்.கே.எம் –> 29 இடங்கள்
எஸ்.டி.எஃப் –> 1 இடம்
பாஜக –> 0 இடம்
காங்கிரஸ் –> 0
இதர கட்சிகள் –> 0
சிக்கிமில் 29 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி முன்னிலையில் உள்ளதால் அதன் தலைவர் பிரேம்சிங் மீண்டும் முதல்வர் ஆகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.