இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட பெருந்தொகை மஞ்சள் கட்டிகள் மன்னாரில் மீட்பு

இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 952 கிலோ மஞ்சள் கட்டி மூடைகள் மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.
கடற்படையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த மூடைகள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக எருக்கலம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரொருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட மஞ்சள் கட்டிகள் விசாரணைகளின் பின்னர் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.